இருவரும் பேசும்போது சுபா உள்ளே காப்பியுடன் வந்தாள். மூவரும் காப்பியை குடித்துக்கொண்டே எதிர்ரெதிதில் அமர்ந்தனர். அப்போது ஜேப்பீ எழுந்து சுபா அமர்ந்திருந்த சேர்-ன் கைப்பிடியில் அமர்ந்து சுபாவின் தோள்களில் கைபோட்டு அமர்ந்தான். பின்னர் மெதுவாக அவளுடைய ஜடையை கையில் எடுத்தான். அவளுடைய ஜடையின் பின்னலை தடவிக்கொண்டே காப்பி குடித்தான். அதை பார்த்த சுமி சற்று ஆச்சரியமாக பார்த்தாள்.
சுமி: ஜேப்பீ…. என்னடா.. உன்னோட அக்கா ஜடையை கையில பிடிச்சுகிட்ட. உனக்கு அக்காவோட முடி அவ்ளோ பிடிக்குமா?
ஜேப்பீ: ஆமா… என்னோட அக்காவோட முடிதான…. நான் தொட்ட என்ன?
சுமி: உன்னை பார்த்தா எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்குடி
சுபா: கண்ணு வைக்காதடி.
சுமி: இல்லடி உண்மையைதான் சொல்றேன். எனக்கேல்லாம் இப்படி ஒரு தம்பி இல்லையேனு.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது ஜேப்பீ எழுந்துசென்று அவர்களின் எதிரே இருந்த computer-ல் அமர்ந்தான். அதிலிருந்த Web Cam-ஐ ஆன் செய்து சுமியும் சுபாவும் பேசுவதை ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்தான். Computer monitor-ன் சுவரின் பக்கம் திரும்பி இருந்ததால் அவர்களுக்கு இவன் ரெக்கார்ட் செய்வது தெரியவில்லை.அதை ஆன் செய்துவிட்டு வந்து சுமியன் பின்புறம் மேஜையில் இருந்த காமிராவை எடுத்தான். சுபா கேட்கும்போது “காமிரா-ல ஒரு சின்ன பிரச்னை…. அதன் சரி பண்ணபோறேன். நீங்க பேசிட்டு இருங்க” என்று சொல்லி மேஜைமேல் அமர்ந்தான். சுபாவிற்கு அவன் சுமியின் தலைமுடியை போட்டோ எடுக்க அயுத்தமாகிறான் எனப்புரிந்தது. அவ்வப்போது காமிரா லென்சை கழட்டி மாட்டினான். சுமி சுபாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவள் பின்புறம் நின்று தைரியமாக அவளுடைய தலைமுடியை அழகாக போட்டோ எடுக்கதுவங்கினான். சுமி தன்னுடைய தலைமுடியை ஜேப்பீ புகைப்படங்களாக சேகரித்துக்கொண்டிருக்கிறான் என தெரியாமல் அவனுக்காக விதவிதமாக அவளுடைய கூந்தலை அசைத்து காட்டிக்கொண்டிருந்தாள்.
சுபா: என்னடி அடுத்து degree முடிச்சத்துக்கு அப்புறம் என்ன பண்ணபோற. முடிவு பண்ணிட்டீயா?
சுமி: இல்ல சுபா. Modeling-னு யோசிச்சேன். ஆனா அதுக்கு நிறைய ட்ரை பண்ணனும்.
சுபா: பண்ணவேண்டியதுதான.
சுமி: Modeling-க்கு காஸ்ட்யூம், காஸ்மேட்டிக்ஸ் அப்புறம் Photo session-னு எங்கப்பாகிட்ட காசு கேட்ட அவ்ளோதான்.
சுபா: அப்போ என்ன செய்ய போற.
சுமி: கொஞ்சநாள் ஏதாவது வேலை செஞ்சு கொஞ்சம் பணம் சேர்க்கணும்.
சுபா: உனக்கு போட்டோ எடுக்கணும்னா நம்ம ஜெயாகுட்டி எடுப்பான். கவலைப்படாத.
சுமி: நல்ல யோசனைதான். எனக்கும் செலவு மிச்சம். சரி,,, நீ என்ன பாண போற.
சுபா: எனக்கு சொந்தமா ஒரு Event management company ஆரம்பிக்கணும். ஆனா அதுக்கு நிறைய field research & analysis பண்ணனும். அதை ஸ்டார்ட் பண்ண எப்படியும் ஒரு ரெண்டு வருஷம் ஆகும். அதுவரை Correspondence-ல அப்லை பண்ணலாம்னு இருக்கேன்.
சுமி: எப்படியும் ரெண்டு வருஷம் ஆகும்னு சொல்ற… அப்புறம் எதுக்கு Correspondence-ல படிக்கணும். நீ -லே படிக்கலாமே.
சுபா: எல்லாம் ஒரு காரணமாதான். உன்கிட்ட சொல்றதுக்கு என்ன. நான் degree முடிச்சத்துக்கு அப்புறம் மொட்டை போட்டுக்க போறேன்.
சுமி: (அதிர்ச்சியுடன்) என்னடி சொல்ற? மொட்டை போட போறியா?
சுபா: ஆமா சுமி. ரொம்ப நாளா ஒரு வேண்டுதல் பாக்கி இருக்கு. சின்ன வயசில இருந்து மொட்டை போடாம தள்ளி வச்சிருக்கேன். இப்போ மொட்டை போடலைனா அப்புறம் கல்யாணத்துக்கு அப்புறம் மொட்டை போடுறமாதிரி ஆயிடும்.
சுமி: எப்படி இவ்ளோ நீளமான முடியை மொட்டை அடிக்க உனக்கு மனசு வருது?
சுபா: கஷ்டம்தான்டி…. ஆனா வேற வழியில்ல.
சுமி: சரி ஏன் சின்ன வயசுல உனக்கு மொட்டை அடிக்கலை.
சுபா: அப்போ ஜேப்பீ சின்னபையன். எனக்கு மொட்டை அடிச்சதும் என்னோட முடியை காணோம்னு அழுவான். அதனாலேயே தள்ளி போட்டேன்.
சுமி: ஜேப்பீ… நீ இதெல்லாம் பண்ணுவியா?
ஜேப்பீ: ஆமா.. எங்கக்காவோட முடி எனக்கு ரொம்ப பிடிக்கும். யாரும் அவ முடியை தொடவிடமாட்டேன்.
சுபா: அப்புறம் நாங்களும் மறந்துட்டோம். என்னோட லீவுலதான் மறுபடி இந்த மொட்டை அடிக்கணும்னு பேச்சு வந்தது. அப்போ காலேஜ் application-லாம் போட்டாச்சு. அதுனால நான்தான் காலேஜ் முடிஞ்சதும் மொட்டை போட்டுக்கிறேன்னு சொல்லிட்டேன்.
சுமி: ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்டி…
சுபா: கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா எப்பொவும் என்னோட தம்பி என்கூட இருக்கான்ல. அந்த தைரியம்தான்.
சுமி: ஜேப்பீ… உங்கக்கா முடியை தொட்டு பார்த்துக்கிட்டே இருக்கியே, மொட்டை போட்டத்துக்கு அப்புறம் என்ன பண்ணுவ….?
ஜேப்பீ: தெரியலை….. பேசாம வாராவாரம் எங்க வீட்டுக்கு வாங்க…. உங்களோட முடியை தொட்டுப்பார்த்துக்கிறேன்.
சுமி: கண்டிப்பா…. உனக்கு இல்லாமலா.
அப்போது சுபாவிற்கு -ல் ஒரு அழைப்பு வந்தது. கதிர் அழைத்ததிருந்தான். சுபா -ஐ எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். அப்போது சுமி ஜேப்பீ-யிடம் “உன்னோட காமிரா சரிபண்ணிட்டீயா?” எனக்கேட்டாள். அவன் சரிபண்னியாச்சு என்றதும், “என்னை ஒரு போட்டோ எடு… எப்படி எடுக்கிறனு பார்க்கிறேன்”-னு சொன்னாள். அவன் சரி என்று சொல்லிவிட்டு காமிராவில் இருந்த memory card-ஐ எடுத்து விட்டு இன்னொரு memory card-ஐ சொருகி சுமியை போட்டோ எடுத்தான். உண்மையில் அவன் எடுத்த போட்டோவை பார்த்து வியந்துபோனாள். அவன் photography பிடிக்கும் என சும்மா சொல்லவில்லை. அவன் எடுத்த போட்டோ மிக அருமையாக இருந்தது. “தம்பி… சூப்பரா இருக்கு டா. இன்னும் கொஞ்சம் போட்டோ எடேன்…. எனக்கே என்னை போட்டோல பார்க்கும்போது அழகா இருக்கு” என்றாள். அவன் சிரித்துக்கொண்டே “சரி” என்று சொல்லிவிட்டு நிறைய புகைப்படங்கள் எடுத்தான். அவளுடைய தலைமுடியை விதவிதமாக போடசொல்லி போட்டோ எடுத்தான். சில நேரங்களில் அவளை திரும்பி உட்காரச்சொல்லி அவள் கூந்தலை மட்டும் போட்டோ எடுத்தான். அவள் எடுத்து முடித்த போட்டோகளை பார்த்து மிகவும் சந்தோசப்பட்டாள்.
சுமி: நீ எடுத்த போட்டோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்குடா.
ஜேப்பீ: தாங்க்ஸ்
சுமி: இதே மாதிரி போட்டோஸ் இருந்தா கண்டிப்பா நான் Modeling-ல பண்ணுவேன்.
ஜேப்பீ: கவலையை விடுங்க. நான் உங்களுக்காகவே ஒரு Modeling company ஸ்டார்ட் பண்றேன்.
சுமி: ஹாஹா… அப்போ நான்தான் உன்னோட company-க்கு ஃபர்ஸ்ட் மாடலா?
ஜேப்பீ: ஹாஹா… கண்டிப்பா.
சுமி: இந்த போட்டோ-ல என்னோட முடி ரொம்ப அழகா இருக்குல…
ஜேப்பீ: உண்மையை சொல்லணும்னா உங்க முடி ரொம்ப அழகா இருக்கு. அதுனாலதான் அது போட்டோல அழகா இருக்கு.
சுமி: சும்மா சொல்லாத ஜேப்பீ. உங்கக்கா அளவுக்கு என்னோட முடி ஒண்ணும் நீளமா இல்லையே.
ஜேப்பீ: ஆமா. ஆனா அதுக்காக உங்க முடி அழகா இல்லைனு அர்த்தம் இல்லையே.
சுமி: உனக்கு என்னோட முடி பிடிச்சிருக்கா?
ஜேப்பீ: இவ்ளோ அழகான முடியை பிடிக்கலைனு யாராவது சொல்லுவாங்களா? எனக்கு உங்க முடி ரொம்ப பிடிச்சிருக்கு.
சுமி: தாங்க்ஸ்
ஜேப்பீ: உங்க முடியை நான் தொட்டுப்பார்க்கலாமா?
சுமி: Sure டா… வந்து தொட்டுபாரு.
ஜேப்பீ எழுந்து சுமியின் அருகில் வந்தான். அவளை திரும்பி உட்கார சொல்லிவிட்டு Web cam-ல் சரியாக தெரியுமா என பார்த்துக்கொண்டான். பின்னர் அவளின் விரிந்த தலைமுடியை கைகளில் அள்ளினான். முதல்முறையாக வேறு ஒருவன் அவளுடைய தலைமுடியை அள்ளி எடுப்பது சுமி-க்கு சிறிது கூச்சமாக இருந்தது. ஆனால் ஜேப்பீ அதை பற்றி கவலைப்படவில்லை. அவன் அவளுடைய தலைமுடியை அள்ளி நுகர்ந்து பார்த்தான். பின்னர் அவள் முடியை மெல்ல கோதிவிட ஆரம்பித்தான். அவனுடைய விரல்கள், அவள் கூந்தலின் கீற்றுக்குள் புகுந்து கோலமிட்டது. சுமி தன்னையும் மறந்து ஒரு சுகத்தை உணர ஆரம்பித்தாள். ஜேப்பீ சுமியின் தலைமுடியை ஒவ்வொரு பகுதியாக பிரித்து தன்னுடைய விரலை உள்ளே விட்டு கோதினான். அவன் சுமியின் கழுத்தில் உள்ள முடியில் கைகளை விட்டபோது அவள் உணர்ச்சிகள் ததும்ப துடித்தாள். பின்னர் அவன் மறுபடி அவளுடைய தலைமுடியை ஒன்று சேர்த்து அள்ளி அவள் கூந்தலுக்கு முத்தம் கொடுத்தான். சுமி அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ரசித்தாள்.
சுமி: ஜேப்பீ….. உனக்கு என்னோட முடி ரொம்ப பிடிச்சிருக்குபோல. நல்லா என்னோட தலைமுடியை அனுபவிக்கிற.
ஜேப்பீ: உங்களுக்கு நான் உங்க முடியை தொடுறது பிடிக்கலையா?
சுமி: இல்லடா. ரொம்ப நல்ல இருக்கு. சுபா கொடுத்துவைச்சவள். தினமும் உன்னோட விரல் அவளோட முடியில விளையாடும்.
ஜேப்பீ: ஹாஹா… ஆமா.
சுமி: இன்னைக்கு நீ எடுத்த போட்டோல என்னோட முடி ரொம்ப அழகா இருந்துச்சு. ஆனா நான் modeling-க்கு போறதுக்கு முன்னாடி என்னோட முடியை கட் பண்ணலாம்னு நினைச்சேன்.ஆனா இப்போ எனக்கு யோசனையா இருக்கு.
ஜேப்பீ: உங்க முடி நீளமா இருந்தாலும், கட் பண்ணினாலும் அழகாத்தான் இருக்கும்.
சுமி: அப்போ என்னோட முடியை எப்படி கட் பண்ண உனக்கு பிடிக்கும்னு சொல்லு. அதே மாதிரி என்னோட முடியை கட் பண்ணிக்கிறேன்.
ஜேப்பீ: எனக்கு பிடிச்சமாதிரினா, உங்க முடியை நான்தான் கட் பண்ணனும். உங்க முடியை நானே கட் பண்ணி விடவா?
சுமி: அப்போ உனக்கு photography மாதிரி முடியை கட் பண்றதும் பிடிக்குமா?
ஜேப்பீ: இதுக்கு நான் பதில் சொல்லல…. உங்களுக்கு தெரியனும்னா உங்க முடியை என்கிட்ட கொடுங்க. என்னோட விரல் மட்டும் இல்ல என்னோட கத்தரிக்கோலும் நல்லா விளையாடும். எனக்கு பிடிச்சமாதிரி நானே உங்க முடியை கட் பண்ணி விடுறேன். OK வா?
சுமி: கண்டிப்பா. உன்னை நம்பி தைரியமா என்னோட முடியை கட் பண்ண கொடுக்கலாம்.
ஜேப்பீ: எப்போனு சொல்லுங்க. கட் பண்ணலாம்.
சுமி: எப்போ வேணும்னாலும். ஒண்ணு கேட்டா தப்பா நினைக்கமாட்டியே?
ஜேப்பீ: கேளுங்க.
சுமி: என்னோட முடியை கட் பண்ண சொல்லும்போதே இவ்ளோ ஆர்வமா இருக்கியே…. உங்க அக்காவுக்கும் நீயே மொட்டை அடிச்சுவிடுவியா?
ஜேப்பீ: என்னைதவிர அவ தலைல யாரும் கைவைக்க முடியாது. கண்டிப்பா அவளோட தலைமுடியை என்னோட கையாளதான் மொட்டை அடிப்பேன்.
சுமி: அப்போ மொட்டை அடிக்கும்போது நீயும் எஞ்சாய் பண்ணுவ… அவளும் எஞ்சாய் பண்ணுவா.
ஜேப்பீ: கண்டிப்பா….. ஏன் நீங்களும் எஞ்சாய் பண்ணணுமா? மொட்டை அடிச்சிக்க ரெடியா?
சுமி: உன் கையாள-னா ரெடிதான். மொட்டை அடிக்க உட்காரவா? இப்போவே மொட்டை அடிக்கிறயா?
ஜேப்பீ: ஹாஹா…. நான் ரெடிதான்
சுமி: ஹாஹா… இப்போ உங்கக்கா உள்ள வந்தா, நாம பேசுறததை பார்த்து பயந்திருவா…
(அப்போது சுபா உள்ளே வந்தாள்.)
சுபா: என்னடி… நா எதுக்கு பயப்படபோறேன்.
சுமி: ஒண்ணும் இல்லடி. சும்மா இவன்கிட்ட பேசிட்டு இருந்தேன்.
சுபா: உண்மையை சொல்லுடி.
சுமி: உனக்கு எப்படி மொட்டை அடிக்கலாம்னு பேசிட்டு இருந்தோம். போதுமா?
சுபா: என்னைவிட எனக்கு மொட்டை அடிக்கிறதுல நீ ரொம்ப ஆர்வமா இருக்க.
சுமி: சும்மாதான்.
சுபா: நீயும் என்கூட மொட்டை போட்டுக்க ரெடியா?
சுமி: அது எனக்கு யாரு மொட்டை அடிச்சுவிடப்போறது-ங்கிறதை பொருத்தது.
(ஜேப்பீ-யை பார்த்துவிட்டு சுபாவிடம் திரும்பி கண்ணடித்தாள்.)
சுபா: அது சரி…. அதுக்குள்ள அவன்கூட செட் சேர்ந்திட்டியா?
சுமி: சரி… சீரியஸா சொல்றேன். உன் தம்பியை எனக்கு முடி வெட்டிவிட சொல்லி இருக்கேன்.
சுபா: அதுக்கு அவன் என்ன சொன்னான்
சுமி: அவனுக்கும் OK தான்.
சுபா: சரி…. உனக்கு இஷ்டம்னா நீ அவன்கிட்ட முடியை கட் பண்ணிக்கோ. ஆனால் காலேஜ்ல இதெல்லாம் யாருக்கும் தெரியாம பார்த்துக்கோ.
சுமி: கண்டிப்பா.
சுபா: சரிடி… நான் நீ கேட்ட எண்ணையை எடுத்து வச்சிட்டேன். போகும்போது எடுத்துக்கோ.
சுமி: இப்போவே நேரமாச்சுடி. கிளம்பனும்.
ஜேப்பீ: சரி…. நீங்க எப்போ வேணும்னாலும் இங்க வாங்க.
சுமி: கண்டிப்பாடா. நாளைக்கு நீ எடுத்த போட்டோஸ் எல்லாம் காலேஜ்ல காட்டுறேன். என்ன சொல்லுராங்கனு பார்ப்போம்.
ஜேப்பீ: சரி.
சுபா: சரி… வா போலாம்.
சுமி: சுபா… என்னையும் உன் தம்பியையும் சேர்த்து ஒரு போட்டோ எடு.
சுபா: சரி. உன்னோட மொபைல் கொடு.
சுமி: இந்தா பிடிச்சிக்கோ.
சுபா சுமியின் மொபைலை வாங்கி இருவரும் அருகில் இருக்குமாறு போட்டோ எடுத்தாள். அதை வாங்கி பார்த்த சுமி திருப்தியுடன் உள்ளே வைத்தாள். கிளம்பும்போது ஜேப்பீயை கட்டிபிடித்தாள். அவள் கட்டிப்பிடிக்கும்போது அவள் தலைமுடியை தடவினான். சுபா குறும்புடன் அவனை பார்த்தாள். சுமி அவன் காதில் மெல்ல “சீக்கிரமா எனக்கு முடி கட் பண்ணி விடு” என்றாள். பதிலுக்கு அவன் “முடியை கட் பண்ண மட்டும் இல்ல. மொட்டை போட்டுக்கவும் ரெடியா இருங்க” என்றான். சுமி அவனை செல்லமாக முறைத்துவிட்டு கிளம்பினாள். அவள் வாசலில் இருந்து இறங்கும்போது திரும்பி பார்த்தாள். சுபா கையசைத்து வழியனுப்பினாள். ஜேப்பீ கையை கத்தரிக்கோல் போல வைத்து வெட்டுவது போல பாவனை செய்தான். பதிலுக்கு சுமி அவனை பார்த்து கட்டைவிரலை உயர்த்தி கண்ணடித்தாள்.
சுமி சென்றவுடன் ஜேப்பீயும் சுபாவும் உள்ளே வந்தனர். ஜேப்பீ சுமிக்கு தெரியாமல் எடுத்த அவளுடைய தலைமுடியின் போட்டோக்களை சுபாவிடம் காட்டினான். அந்த போட்டோக்கள் அனைத்தும் மிக அருமையாக இருந்தது. போட்டோவில் சுமியின் முடி கற்றைகள் அனைத்தும் தெளிவாக தெரிந்தது. போட்டோக்களை காட்டியபின் Webcam-ல் பதிவான வீடியோவை போட்டுக்காட்டினான். முதலில் சுபாவும் சுமியும் பேசிக்கொண்டிருந்தது வந்தது. பின்னர் சுமியும் ஜேப்பீயும் பேசிக்கொண்டிருந்தது வந்தது. சுபா மிகவும் ஆர்வமாக உட்கார்ந்து பார்க்கதுவங்கினாள். அவள் சுமியின் முடியில் தம்பி விளையாடுவதை பார்க்க ஆரம்பித்தபோது, அவள் தம்பி சுபாவின் ஜடையை கையில் எடுத்து பின்னலை அவிழ்த்துவிட ஆரம்பித்திருந்தான். Computer-ல் சுமியுடைய தலைமுடியிலும் நிஜத்தில் அவன் அக்காவின் தலைமுடியிலும் விளையாடிக்கொண்டிருந்தான். சுபாவின் தலைமுடியை இருகைகளிலும் இறுக்கமாக பிடித்து, அக்காவின் கூந்தலில் முத்தமழை பொழிந்துகொண்டிருந்தான். Computer-ல் இருந்த வீடியோ முடிந்த பிறகும் சுபாவின் தலைமுடியை அவன் விடவில்லை. சுபாவின் கூந்தல் மனம் அவனை நிறுத்தவிடாமல் விளையாட வைத்தது. ஒருவழியாக சிறிதுநேரம்கழித்து அக்காவின் தலைமுடியிலிருந்து கையை எடுத்தான். சுபா அவனை பார்த்து சிரித்துவிட்டு அவளுடைய தலைமுடியை அள்ளி கொண்டை போட்டாள்.
தினமும் இதுபோல அக்காவின் முடியில் விளையாடினான். அப்பா வீட்டிற்க்கு இரவு வருவதற்குமுன் தன்னுடைய விளையாட்டை முடித்துவிடுவான். இருவரும் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டனர். அப்படியே நான்கு மாதங்கள் ஓடின… இடையில் அவ்வப்போது சுமி வீட்டிற்க்கு வரும்போது அவளுடைய தலைமுடியிலும் விளையாடினான். அவளுக்கு தெரிந்து சில போட்டோக்களும், தெரியாமல் சில போட்டோக்களும் எடுத்து வைத்துக்கொண்டான். அவனுக்கு தேர்வு முடிந்தது. இன்னும் ஓரிரு தினங்களில் சுபாவுக்கும் கல்லூரி தேர்வுகள் முடிவடையும் நிலையில் இருந்தது. தேர்வுகள் முடிந்ததும் திருப்பதி சென்று மொட்டை போடலாம் என முடிவெடுக்கப்பட்டது. சுபாவின் அப்பா சொன்ன தேதிக்கு இரண்டு தினங்களுக்கு முன்னால் சுபாவும் ஜேப்பீயும் மட்டும் கிளம்பி சென்று அங்கு ஒரு நண்பரின் Guest house-ல் தாங்கி இருக்குமாறும் அவர் பின்னால் வந்து சேர்ந்துகொள்வதாகவும் கூறினார். இருவரும் “சரி” என்றனர்.
அவர்கள் முடிவெடுத்த நாள் வந்தது. ஒரு வாடகை கார் எடுத்துக்கொண்டு சுபாவும் ஜேப்பீயும் கிளம்பினர். சுபாவும் அவள் தம்பியும் திருப்பதிக்கு செல்ல அயுத்தமாயினர். சுபா தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டு ஒரு Selfie எடுத்தாள். அதை கதிர்-க்கு அனுப்பிவிட்டு “Last photo with my long hair in home  ” என மெஸேஜ் செய்தாள். உடனடியாக “i’m Heartbroken. But waiting for your new look” என பதில் வந்தது. கார் அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டது. சுமார் நான்கு மணிநேர பயணத்திற்கு பின் இருவரும் திருப்பதி சென்றதும் அந்த Guest house-ல் இறங்கினர். அப்போது பக்கத்து Guest house-ல் இருந்த ஒருவர் இவர்கள் இறங்குவதை பார்த்து அங்கு வந்தார். அவர் சுபாவிடம் வந்து பேசினார்.
நபர்: “நீங்க தமிழா?”
சுபா: ஆமா
நபர்: என்னோட பேர் ராகவன். இந்த பக்கத்து guest house-லதான் இருக்கேன். குடும்பதையும் கூட்டிட்டு வந்திருக்கேன். ஒரு சின்ன உதவி வேணும்.
சுபா: சொல்லுங்க.
ராகவன்: வீட்டில மனைவிக்கு வேண்டிட்டு மொட்டை போடுறதுக்கு இங்க கூட்டிட்டு வந்தேன். ஒரு அவசர வேலையா போகணும். இப்போ ஒரு Barbar ah வரச்சொல்லி இருக்கேன். லேடீஸ் தனியா இருக்க முடியாது. அதுனால Barbar வரும்போது நீங்க கொஞ்சம் கூட இருக்க முடியுமா?
(சுபா தம்பியை பார்த்து சிரித்தாள். அவனுக்கு அவள் சிரிப்பின் அர்த்தம் புரிந்தது)
சுபா: அதனால ஒண்ணும் இல்ல அங்கிள்…. நாங்க கூட இருக்கோம்.
ராகவன்: அவங்ககிட்ட காசு கொடுத்து இருக்கேன். அதுவே போதுமானது.
சுபா: பரவாயில்லை அங்கிள்.
ராகவன்: நான் நாளைக்கு விடியற்காலைல வந்திருவேன்.
சுபா: நாங்க எங்க லக்கேஜ்ஜை எடுத்து வச்சிட்டு இருக்கோம். வந்தவுடனே சொல்லுங்க. நாங்க அங்க வறோம்.
ராகவன்: தாங்க்ஸ் மா. தாங்க்ஸ் தம்பி. நான் என்னோட Wife கிட்ட சொல்லிடுறேன்.
அவரிடம் பேசிவிட்டு உள்ளே இருவரும் நுழைந்தனர். “பக்கத்து வீட்டில இப்படி ஒரு அதிர்ஷ்டமா நமக்கு” என ஜேப்பீ சுபாவிடம் சொன்னான். லக்கேஜ்ஜை எடுத்துவைத்து முடித்துவிட்டு தற்செயலாக ஜன்னல் வழியாக பார்த்தான். அந்த ராகவன் மொட்டை அடிப்பது போல கையை தலைமீது வைத்து காட்டும்போதெல்லாம் அவருடைய மனைவி எதுவும் பேசாமல் தலையை ஆட்டினாள்.
சிறிதுநேரம் கழித்து அவர்களுடைய காலிங் பெல் சத்தம் கேட்டது. ராகவனுடைய மனைவி அங்கு நின்றிருந்தார். கொஞ்சம் வரமுடியுமா எனக்கேட்டார்? சுபாவும் ஜேப்பீயும் இறங்கி அவர்களுடைய Guest house-க்கு சென்றனர். அவர் மனைவியின் ஜடை இடுப்புக்கு கீழ் வரை வளர்ந்து அடர்த்தியாக இருந்தது. விரல்விட்டு என்னும் அளவுக்கு அவள் தலையில் நரைமுடி தெரிந்தது. அவளை நடக்கவிட்டு அவளுடைய தலைமுடியை ரசித்துக்கொண்டே ஜேப்பீ பின்னால் நடந்தான். அவன்பின் சுபா நடந்தாள். அவர்களுடைய Guest house-க்குள் நுழைந்தபோது அங்கு சுபாவின் வயதை மதிக்கதக்க இரண்டு இளம்பெண்களும், அவர்களுக்கு மூத்தவள் போல ஒரு பெண்ணும், நின்றிருந்தனர். அனைவரின் தலைமுடியும் தொடைவரை நீளமாக இருந்தது. ஜேப்பீ ஒருகணம் மெய்சிலிர்த்துவிட்டான். சுபா அவளிடம் “Aunty, உங்களுக்கு மொட்டை போடவந்த Barbar எங்க?” எனக்கேட்டாள். அதற்கு ராகவனின் மனைவி “எனக்கு மட்டும் இல்லமா. என்னோட பொண்ணுங்களுக்கும் தான் மொட்டை அடிக்கணும்” என்றாள். சுபா கண்கள் விரிய அந்த பெண்களை பார்த்தாள். ஜேப்பீயின் மனது காற்றில் பறந்தது. அங்கு மொட்டை அடிப்பதற்கு தயாராக அவர்கள் உட்கார பலகை வைக்கப்பட்டு இருந்தது. ஜேப்பே சற்று வியப்புடன் “எல்லாருக்குமா?” எனக்கேட்டான். அதற்கு அந்த மூத்தபெண் “ஆமா.. எல்லாருமேதான் மொட்டை போடப்போகிறோம்” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.
No comments:
Post a Comment